கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்
சாயாவனம் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சாயாவனம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவு. திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ. சாயாவனேசுவரர் கோயில் (படம் நன்றி: TN Temples Project ) இறைவன்: சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் - சுயம்பு லிங்கம். சதுர ஆவுடையார் இறைவி: குயிலினும் நன்மொழியம்மை / கோசகாம்பாள் தல மரம்: கோரைப் புல் (பைஞ்சாய்) தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தம் வழிபாட்டு நேரம்: காலை 9:00 - 11:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி வரை தலச் சிறப்புகள் தேவாரப் பாடல் பெற்ற தலம் வில்லேந்திய வேலவர் கோரைப்புல்லைத் தலமரமாகக் கொண்ட ஒரே தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் முக்தியடைந்த தலம். மாடக்கோயில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு காவிரிக் கரை தலங்களில் ஒன்று. பஞ்சவனத் தலங்களுள் ஒன்று. கோயில் திருச்சுற்றில் பஞ்சபூத லிங்கங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள். பாடல் பெற்ற தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம் 274 தலங்களில் ஒன்று. காவிரி வடகரைத் தலங்களில் 9-வது தலம். திர...