Posts

Showing posts from June, 2026

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கோழம்பநாதர் கோயில்)

Image
திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கோழம்பநாதர் கோயில்) சம்பந்தராலும் அப்பராலும் தேவாரப் பாடல்  (152/276)  பெற்ற காவேரி தென்கரை  (35/128)  திருத்தலம் . இறைவி சௌந்தரநாயகி. தல மரம் வில்வம், முல்லைக் கொடி. தீர்த்தம் - கோயில் நுழைவாயிலுக்கு முன் உள்ள பிரம்ம தீர்த்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் செங்கல் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டது. செம்பியன் மாதேவி கலைப்பாணி உடையது. கிழக்கு வெளி மொட்டை கோபுரம் வெளித்  திருசுற்றில் அம்மன் சன்னிதி சௌந்தரநாயகி (படம் நன்றி: ஆலயத் துளிகள்.காம்) கோகில சுப்ரமண்யர் உள் திருசுற்று தெற்குத் திருச்சுற்று - பெரு மண்டபம் தெற்குத் திருச்சுற்று  செம்பியன் மாதேவி கலைப்பாணியின் நீளமான அர்த்த மண்டபம். பக்கத்திற்கு மூன்று தேவகோட்டங்களும் ஒரு கோட்ட பஞ்சரமும் உடையது. அர்த்த மண்டபத்தின் 6 தேவகோட்டங்களும், விமானத்தின் வழக்கமான 3 தேவகோட்டங்களும் ஆக மரபான ஐந்திற்கு பதிலாக ஒன்பது. (படம் நன்றி: அனந்தராமன். கே, கூகிள் மேப்ஸ் மூலம...