Posts

Showing posts with the label குலோத்துங்கன்

குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு, சென்னை

Image
  சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ளது குறுங்காலீஸ்வரர் கோயில்.  இக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனது (1178 - 1219) மற்றும் விஜயநகர கால கல்வெட்டுகள் இவ்வூரை  'ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மாங்காடு நாட்டுக் கோயம்பேடு'  என்று அழைக்கின்றன.#  15 ஆம் நூற்றாண்டில்  அருணகிரிநாதர்  திருப்புகழில் இவ்வூரை 'கோசைநகர்' என்கிறார்   ஆறு நிலை ராஜகோபுரம். கோபுரம், மூலவர் கருவறை, அம்மன் கருவறை மூன்றுமே  வடக்கு  நோக்கியவை. வடக்கு தவத்துகுரியது. (தெற்கு - எம பயம் நீக்குவது, கிழக்கு - நன்மை பயப்பது, மேற்கு - செல்வம் தருவது)  மேற்கண்ட கோபுரம் புதிதாகக் கட்டப்பட்டது. அதற்கு முன் இருந்த கல் தளமும், சிறிய கோபுரமும். (படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858) கோயிலின் முன் வடகிழக்கில் குசலவ தீர்த்தம். பித்ரு தோஷம் தீர இங்கு பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்யலாம். நீண்ட நாள் பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி தெரியாதவர்கள் எந்நாளிலும் இங்கு தர்ப்பணம் செய்யலாம்.* (படம...