Posts

Showing posts with the label கோரைப்புல் தலமரம்

சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்

Image
சாயாவனம்   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சாயாவனம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவு. திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ. ஆற்றுப்படை வழிநடத்திய 'கண்ணகியின் அடிச்சுவட்டில்' பயணத்தின்போது முதல் நாள் (29/04/2026) காலை கண்ட இடங்களில் ஒன்று. சாயவனத்தின் பெயர் கல்வெட்டுகளிலும் தேவாரத்திலும் ' திருச்சாய்க்காடு '.   சாயாவனேசுவரர் கோயில் இறைவன்: சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் - சுயம்பு லிங்கம். சதுர ஆவுடையார் இறைவி: குயிலினும் நன்மொழியம்மை / கோசகாம்பாள் தல மரம்: கோரைப் புல்  (பைஞ்சாய்) தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தம் சாயாவனேஸ்வரர் கோயில் கோபுரம் அருகில் திருக்குளம் - ஐராவதத் தீர்த்தம் மூன்று நிலை கோபுரம். குடமுழுக்கிற்காக வேலைகள் (பழைய படம் நன்றி:  TN Temples Project  12/2018) கோபுரத்தின் முன்புரம் - அமைதியான பரந்த வளாகம் கோபுரத்தின் வடக்கில் தலச் சிறப்புகள் தேவாரப் பாடல் பெற்ற தலம்  வில்லேந்திய வேலவர் கோரைப்புல்லைத் தலமரமாகக் கொண்ட ஒரே தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் ...