Posts

Showing posts with the label நாகேசுவரர் கோயில்

குடந்தை கீழ்கோட்டம் - நாகேசுவரர் கோயில்

Image
  அமைவிடம் கும்பகோணம் நகரில் கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது. ஊர்ப் பெயர் இவ்வூரின் பண்டைய பெயர்  'திருக்குடமூக்கு' . கல்வெட்டுகளில் முதலாம் ராஜேந்திரன் காலம் முதல்  'உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கு'  என்றும், அதற்கு முன்  'வடகரை பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கு'  என்றும் குறிப்பிடப்படுகிறது.    கோயில் வரலாறு தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 90-வது தலம். காவிரித்தலம். திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.  பல்லவர் கால செங்கள் தளி முற்கால சோழர்களான முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஆ 871 - 907), முதலாம் பராந்தக சோழன் (பொ.ஆ 907 - 955) காலத்தில் கற்றளியாக்கப்பட்டது.   'பாடகச்சேரி இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான் புதர் மண்டிக்கிடந்த இந்தக் கோயிலை புதுப்பித்து 1923-ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்வித்துள்ளார், அதற்காக தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுத்து நிதி திரட்டியுள்ளார். பின்னர் 1959, 1988, 2015 இல் குடமுழு...