திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கோழம்பநாதர் கோயில்)

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கோழம்பநாதர் கோயில்) சம்பந்தராலும் அப்பராலும் தேவாரப் பாடல் (152/276) பெற்ற காவேரி தென்கரை (35/128) திருத்தலம். இறைவி சௌந்தரநாயகி. தல மரம் வில்வம், முல்லைக் கொடி. தீர்த்தம் - கோயில் நுழைவாயிலுக்கு முன் உள்ள பிரம்ம தீர்த்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் செங்கல் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டது. செம்பியன் மாதேவி கலைப்பாணி உடையது.

கிழக்கு வெளி மொட்டை கோபுரம்



வெளித்  திருசுற்றில் அம்மன் சன்னிதி

சௌந்தரநாயகி
(படம் நன்றி: ஆலயத் துளிகள்.காம்)

கோகில சுப்ரமண்யர்

உள் திருசுற்று

தெற்குத் திருச்சுற்று - பெரு மண்டபம்

தெற்குத் திருச்சுற்று 
செம்பியன் மாதேவி கலைப்பாணியின் நீளமான அர்த்த மண்டபம். பக்கத்திற்கு மூன்று தேவகோட்டங்களும் ஒரு கோட்ட பஞ்சரமும் உடையது. அர்த்த மண்டபத்தின் 6 தேவகோட்டங்களும், விமானத்தின் வழக்கமான 3 தேவகோட்டங்களும் ஆக மரபான ஐந்திற்கு பதிலாக ஒன்பது.
(படம் நன்றி: அனந்தராமன். கே, கூகிள் மேப்ஸ் மூலம்)

அர்த்த மண்டபத்தின் தெற்கு தேவகோட்டங்கள்
(படம் நன்றி: காயத்ரி முருகவேல், கூகிள் மேப்ஸ் வழி)

1. அர்த்த மண்டப தெற்கு முதல் தேவகோட்டம்

2. அர்த்த மண்டப தெற்கு 2ஆம் தேவகோட்டம்


3. அர்த்த மண்டப தெற்கு மூன்றாம் தேவகோட்டம்

4. விமான தெற்கு தேவகோட்டம்
(படம் நன்றி: மன்னை மூர்த்தி, கூகிள் மேப்ஸ் மூலம்)

(படம் நன்றி: அனந்தராமன் கே, கூகிள் மேப்ஸ் மூலம்)

(படம் நன்றி: மன்னை மூர்த்தி, கூகிள் மேப்ஸ் மூலம்)

விமானத்தின் மேற்குப் பக்கம் - கட்டடக்கலைக் கூறுகள்
அ - அதிட்டானம்; ஆ - சுவர்; இ - கூரை
1. அதிட்டானத்தின் கீழ்ப்பகுதியான உபானம் தரையில் புதைந்துள்ளது. அடுத்த ஜகதியும் (1) பெரும்பாலும் புதைந்துள்ளது. 2 - வட்டக் குமுதம். 3 - யாளிகளின் வரிசையான பிரதிவரி. பிரதிவரி கொண்ட அதிட்டானம் பிரதிபந்த அதிட்டானம்.
2. சுவர்: சுவர்த் தூண்கள் (6) சுவரை 3 பத்திகளாகப் பிரிக்கின்றன 4 - கர்ண பத்தி; 5 - முன் தள்ளியுள்ள சாலைப்பத்தி. இதில் தேவ கோட்டம் உள்ளது. அதன் மேல் தோரணம். சுவர்த் தூண்கள் மீது போதிகை (7)
3. கூரை - போதிகைகள் மீது உத்தரம் (8), வெவ்வேறு நிலைகளில் உள்ள பூதங்களின் வரிசையான வலபி (9), முன் நீண்டு லாட வடிவ நாசிகளைக் கொண்டுள்ள கபோதம் (10), யாளி வரிசையான பூமிதேசம் (11).

5. விமான மேற்கு தேவகோட்டம்

வடக்குத் திருச்சுற்று
1 - விமானம்; 2 - இடைநாழி; 3 - அர்த்த மண்டபம்; 4 - பெரு மண்டபம்
விமான மேல் பாகங்கள்: ஈ - கழுத்து; உ - சிகரம்; ஊ - கலசம்

பெரு மண்டபத்தின் கட்டடக்கலை விமான, அர்த்த மண்டபத்தில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். எ.கா - அதிட்டானத்தில் யாழிகளின் பிரதிவரி இல்லை. வலபியில் பூதங்களின் வரிசை இல்லை. கோட்ட அமைப்பின் மேல் தோரண்ம் இல்லை, பதிலுக்கு விமான மேல் அமைப்பு. இது இந்த மண்டபம் பிற்காலத்தில் கட்டி இணைக்கப்பட்டதைக் காட்டுகிறது.

விமானம் - மேற்குப் பக்கம்

6. விமான மேற்கு தேவகோட்டம் - நான்முகன்

அர்த்த மண்டபத்தின் மேற்கில் மூன்று தேவகோட்டங்கள்




7. அர்த்த மண்டப மேற்கு தேவகோட்டம் 1


அர்த்த மண்டப மேற்கு தேவகோட்டம் 2 - கொற்றவை
அவள் வலப்புறம் அரிகண்ட தற்பலி சிற்பம், இடது புறம் வணங்கும் அடியார்

அரிகண்ட தற்பலி
(படம் நன்றி: அனந்தராமன் கே, கூகிள் மேப்ஸ் மூலம்)

9. அர்த்த மண்டப மேற்கு தேவகோட்டம் 3 - பிச்சாடனர்



மகர துண்டம் - மகரத்தின் வாயில் சிங்கம் மீது வீரன்

தேவகோட்டங்கள் மீது உள்ள தோரணங்கள்

ஊர்த்துவ தாண்டவம்

சதுர தாண்டவம்

? விடையேறி (ரிஷபாருடர்)


தென்முகத்தோன் (தக்ஷிணாமூர்த்தி)

? விசாரசர்மனுக்கு சண்டிகேசப் பட்டம் அளித்து கொன்றை மாலை சூடும் சிவன்

யானை உரி போர்த்தியவர் (கஜசம்ஹாரர்)

?

கல்வெட்டுகள்

இங்குள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டவை முதலாம் பராந்த க சோழன் (கி.பி. 907 – 955) கல்வெட்டுகள் (2). கண்டராதித்தன் (மற்றும் செம்பியன் மாதேவி (3), உத்தம சோழன் (2), முதலாம் ராஜராஜன் (3), முதலாம் ராஜேந்திரன் (2), ராஜாதி ராஜன் (1), முதலாம் குலோத்துங்கன் (1), விக்கிரம் சோழன் (1), பிற்கால பாண்டியர்கள் (1), கிருஷ்ணதேவராயர் (1) ஆகியோரின் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளும் இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இறைவன் "பேராவூர் நாட்டுத் திருக்கோழம்ப மகாதேவர்" என்று அழைக்கப்பட்டுள்ளார். ஊர் "சோழ சதுர்வேதி மங்கலம்" மற்றும் "தூய சதுர்வேதி மங்கலம்" என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

மூலக் கோயில் உள்

மகாமண்டப வாயில்
(படம் நன்றி: மன்னை மூர்த்தி, கூகிள் மேப்ஸ் வழி)

(படம் நன்றி: அனந்தராமன் கே, கூகிள் மேப்ஸ் வழி)

(படம் நன்றி: அனந்தராமன் கே, கூகிள் மேப்ஸ் வழி)

அர்த்த மண்டப வாயில், வாயிற்காவலர்கள்



தலபுராணம்
இந்திரனது தீசொல்லால் குயில் உடல் பெற்ற சந்தன் என்னும் வித்தியாதரன்  இவ்விறைவனை வணங்கி சுய உருவம் அடைந்தான். அதனால் இறைவனுக்கு கோகிலேஸ்வரர் என்ற பெயர் உண்டானது.
இந்திரனே அகலிகை, கௌதம முனிவரால் பெற்ற தீச்சொல்லில் இருந்து இந்த இறைவனை வணங்கி மீண்டான்.
பிரம்மனுக்காக பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூவும் தீச்சொல்லில் இருந்து மீண்ட தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவவழிபாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


ஒரு சமயம் சிவனும் திருமாலும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். அப்போது சிவன் ஒரு ஐயத்தை எழுப்ப, பார்வதி தன் தமையன் திருமாலுக்குச் சாதகமன பதிலைக் கூறினார், சிவன் கோபமுற்று பார்வதியை பசுவாக பூமியில் பிறக்க தீச்சொல் இட்டார். திருவாவடுதுறையில் பசுவாகப் பிறந்த பார்வதி அருகில் உள்ள திருகோழம்பியத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது பசுவின் காற்குளம்பு இடறி இறைவன் வெளிப்பட்டார்.
(படம் நன்றி: ஆலயத் துளிகள்.காம்)
பசுவின் காற்குளம்புத் தழும்பு
(படம் நன்றி: ஆர். கே.எஸ். முருகன் கூகிள் மேப்ஸ் மூலம்)

மூலவர்: கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்
(படம் நன்றி: ஆலயத் துளிகள்.காம்)


தேவாரம்: 
திருநாவுக்கரசர் பதிகம்; திருக்கோழம்பம்; 5.064.02

கயிலை நன்மலை ஆளும் கபாலியை,
மயில் இயல்மலை மாதின் மணாளனை,
குயில்ப யில்பொழில் கோழம்பம் மேய,என்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே.

பொழிப்புரை : திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தில் இருக்கும் என் உயிர் ஆகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.

திருஞானசம்பந்தர் பதிகம்; திருக்கோழம்பம்; 2.013.01

நீற்றானை, நீள்சடை மேல்நிறைவு உள்ளதுஓர்
ஆற்றானை, அழகுஅமர் மென்முலை யாளைஓர்
கூற்றானை, குளிர்பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும்இடர் ஏகவே.

பொழிப்புரை :திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மென்முலைகளைக் கொண்ட உமையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடை மேல் அமர்ந்தவன் ஆகியவனை உங்கள் துன்பங்கள் நீங்க வேண்டி போற்றுங்கள்`.


துணை



















Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்