Posts

Showing posts with the label கும்பகோணம்

ராமசாமி கோயில், கும்பகோணம்

Image
   5 நிலை ராஜ கோபுரம் கோயில் கும்பகோணம் பெரிய கடை வீதியின் தெற்குக் கோடியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. 19/11/2022 மதியம் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் நடத்திய மரபுநடையில். தஞ்சை நாயக்கர் கால சிற்பங்களின் களஞ்சியமாக விளங்கும் முன்  மண்டபம்.  வெளித் திருசுற்றில் ராஜகோபுரத்தை அடுத்து அமைந்துள்ளது.  64 தூண்கள் கொண்ட மண்டபத்தின் மற்றொரு பார்வை.  மண்டபத்தில் உள்ள தஞ்சை நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கர் (பொ.ஆ. 1614 - 1640). இந்தக் கோயிலை எழுப்பியவர். தாராசுரத்தில் ஒரு குளம் வெட்டுகையில் கிடைத்த ராமர் சீதை  திருவுருவம் இக்கோயிலைக் கட்டக் காரணமாயிற்று.  தோப்பூர் போரில் பெற்ற பெரும் வெற்றியைக் கொண்டாட இகோயிலைக் கட்டினார் என்கிறார் வரலாற்றாசிரியர் V. ஸ்ரீராம்(2). கோவிந்த தீட்சிதர். தஞ்சை நாயக்க மன்னர்களில் முதல் மூவரான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுனாத நாயக்கர் ஆகியோருக்கு அமைச்சராக பணியாற்றியவர். இந்தக் கோயில் உள்ளிட்ட பல பணிகளை முன்னின்று முடித்தவர் (படம்: Ssriram mt, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa...