Posts

Showing posts from April, 2026

சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்

Image
சாயாவனம்   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சாயாவனம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவு. திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ. ஆற்றுப்படை வழிநடத்திய 'கண்ணகியின் அடிச்சுவட்டில்' பயணத்தின்போது முதல் நாள் (29/04/2026) காலை கண்ட இடங்களில் ஒன்று.   சாயாவனேசுவரர் கோயில் இறைவன்: சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் - சுயம்பு லிங்கம். சதுர ஆவுடையார் இறைவி: குயிலினும் நன்மொழியம்மை / கோசகாம்பாள் தல மரம்: கோரைப் புல்  (பைஞ்சாய்) தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தம் சாயாவனேஸ்வரர் கோயில் கோபுரம் அருகில் திருக்குளம் - ஐராவதத் தீர்த்தம் மூன்று நிலை கோபுரம். குடமுழுக்கிற்காக வேலைகள் (பழைய படம் நன்றி:  TN Temples Project  12/2018) கோபுரத்தின் முன்புரம் - அமைதியான பரந்த வளாகம் கோபுரத்தின் வடக்கில் தலச் சிறப்புகள் தேவாரப் பாடல் பெற்ற தலம்  வில்லேந்திய வேலவர் கோரைப்புல்லைத் தலமரமாகக் கொண்ட ஒரே தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் முக்தியடைந்த தலம். மாடக்கோயில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு காவிரிக...

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

Image
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்னும் சிற்றூரில் உள்ள பூவராகர் கோயிலில் அமைந்துள்ள 'புருஷசூக்த மண்டபம்' மிக அழகான மற்றும் தனித்துவமான் 16 கால் மண்டபம். தரையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நுணுக்கமான சிற்பங்கள், அலங்காரங்கள், அமைப்புகள் உடையது.  இந்த 16 கால் மண்டபம் மேடையாய் அமையாது இது தரை நிலையில் அமைந்த மண்டபம். நான்கு பக்கங்களிலும் உள்ள அதிட்டானத்தின் மீது 12 தூண்கள் நிற்கின்றன. மற்ற நான்கு தூண்கள் மண்டபத்தின் நடுவில் தரையில் இருந்து நேரடியாக எழுகின்றன. நான்கு மூலைத் தூண்கள் மூன்று துணைத் தூண்களும் ஒரு மையத் தூணும் சேர்ந்த கூட்டுத் தூண்களாக உள்ளன.   நான்கு பக்கங்களிலும் நடுப்பகுதி நுழைவாயிலாக அமைந்துள்ளது. நான்கு நுழைவாயில்களின் இரு பக்கங்களிலும் யாழித் தூண்கள் உள்ளன. விதானச் சிற்பங்கள் பதினாறு தூண்களுக்கு இடையே அமைந்த ஒன்பது சதுரங்களின் விதானங்களை முழுவதுமாக தொங்கும் மலர் சிற்பங்கள் நிறைக்கின்றன. அந்த மலர்களில் கிளிகளும் நிறைந்திருக்கின்றன. சுற்றியுள்ள சதுர அடைப்புகளில் நடனக் காட்சிகள், அன்னங்கள், ரதி மன்மதன், கின்னரர்கள் தெய்வங்கள், அவர்களை வணங்கும் அடியார்கள் போன்ற சி...