ராமசாமி கோயில், கும்பகோணம்

  

5 நிலை ராஜ கோபுரம்
கோயில் கும்பகோணம் பெரிய கடை வீதியின் தெற்குக் கோடியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
19/11/2022 மதியம் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் நடத்திய மரபுநடையில்.

தஞ்சை நாயக்கர் கால சிற்பங்களின் களஞ்சியமாக விளங்கும் முன்  மண்டபம்.  வெளித் திருசுற்றில் ராஜகோபுரத்தை அடுத்து அமைந்துள்ளது. 

64 தூண்கள் கொண்ட மண்டபத்தின் மற்றொரு பார்வை. 

மண்டபத்தில் உள்ள தஞ்சை நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கர் (பொ.ஆ. 1614 - 1640). இந்தக் கோயிலை எழுப்பியவர். தாராசுரத்தில் ஒரு குளம் வெட்டுகையில் கிடைத்த ராமர் சீதை  திருவுருவம் இக்கோயிலைக் கட்டக் காரணமாயிற்று.  தோப்பூர் போரில் பெற்ற பெரும் வெற்றியைக் கொண்டாட இகோயிலைக் கட்டினார் என்கிறார் வரலாற்றாசிரியர் V. ஸ்ரீராம்(2).


கோவிந்த தீட்சிதர். தஞ்சை நாயக்க மன்னர்களில் முதல் மூவரான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுனாத நாயக்கர் ஆகியோருக்கு அமைச்சராக பணியாற்றியவர். இந்தக் கோயில் உள்ளிட்ட பல பணிகளை முன்னின்று முடித்தவர்
(படம்: Ssriram mt, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)
மேலதிக விவரங்களுக்கு: தமிழ் விக்கிபீடியா; கோவிந்த தீட்சிதர்

உள் திருச்சுற்று, திருச்சுற்று மாளிகை, 5 நிலை வேசர விமானம்
கிழக்குப் பார்வை

விமானத்தின் தரைதளத்தின் மேற்குப் பார்வை
தரையை உயர்த்தியதில் உபபீடத்தின் பெரும்பகுதி புதைந்து விட்டது. அதன் கபோதமும் பிரதிவரியும் மட்டும் வெளியே தெரிகின்றன.  
அதிஷ்டானம் சாலைப் பத்திக்கு பத்ம-கபோத பந்தமாயும், பக்கங்களில் பாதபந்தமாயும் அமைந்துள்ளது (வர்க்கபேதம்). சாலையிலும், அகாரைகளிலும் தேவ கோட்டங்கள். 

இந்திரன் - ஒரு கோட்டச் சிற்பம்

உள் பிரகாரத்தின் திருச்சுற்று மாளிகை சுவரில் ராமாயணத்தின் முழுக் கதையும் 219 ஓவியங்களாக மூன்று வரிசைகளில் வரையப்பட்டுள்ளது. மையக்கோயிலை மூன்று முறை வலம் வந்து ராமயணக் கதையை பார்த்து முடிக்கும் விதமாய் உள்ளது தனிச் சிறப்பு. 
(படம் நன்றி: https://cultureandheritage.org/2022/08/ramaswamy-temple-kumbakonam-in.html)

பல தனிச் சிறப்புகள் வாய்ந்த கோயில் கருவறை தெய்வங்கள்
 1. ராமரும் சீதையும் முடிசூடும் கோலத்தில் ஓரே பீடத்தில் அமர்ந்திருப்பது
2. ராமரது தம்பிகள் அனைவரும் இருப்பது. சீதையின் பக்கத்தில் சாமரம் வீசும் சத்ருக்குனன், ராமர் வலதுபுறம் லக்ஷ்மணன், அவர் பக்கத்தில்வெண்கொற்றக் குடை ஏந்தும் பரதன். இக்கோயில் தவிர அயோத்தி (உ.பி), அயோத்யாபட்டிணம் (சேலம்) ஆகிய இரு இடங்களில் மட்டுமே இவ்வாறுள்ளது. இதனால் இத்தலம் தக்ஷிண அயோத்தி என்று அழைக்கப்படுகிறது.
3. லக்ஷ்மணன் ராமரின் கோதண்டத்தை ஏந்தி நிற்பது.
4.அனுமன் ஒரு கையில் வீணையையும் மறுகையில் ஒரு சுவடியையும் கொண்டு அமர்ந்திருப்பது. புராணங்களை ராமனுக்கு வாசிப்பது அனுமனது ராம சேவைகளுள் ஒன்று என தியாகராஜர் தனது 'கலுகுனாபத நீரஜ ஸேவ' என்ற தன் சாகித்தியத்தில் பாடுகிறார்.


சிற்பக் களஞ்சியமான முன்மண்டபத்தின்
அகன்ற மையத் தூண்கள் ஒன்றில் சீதைப் பிராட்டி.

பக்கத்தில் கோதண்டபாணியாக ராமர்

கோதண்டபாணியாக ராமரின் பல பெரிய சிற்பங்களும்,
சிறு சிற்பங்களும் தூண்களை அணி செய்கின்றன.

ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்திரர்

அகலிகை சாப விமோசனம்
இடமிருந்து வலதாக - லக்ஷ்மணன், விஸ்வாமித்திரர், ராமர்,
ராமர் பாதம் பட்டு கல்லில் இருந்து மீண்டுவரும் அகலிகை

ராமன் சீதை திருமணம்


மாய மானாக வந்த மாரீசன் வதம் 

அனுமன் தோள்மீது ஏறி போர்புரியும் ராமர்


ராம லக்ஷ்மணர்கள்

ராமர் அனுமன் ஆலோசனை

விபீஷணன் பட்டாபிஷேகம்
(இதே போன்ற சுக்ரீவன் பட்டாபிஷேக சிற்பமும் உள்ளது)

ராமன் சீதை அரியாசனத்தில்

அனுமன். அனுமனது அழகிய சிற்பங்கள்
அதிக எண்ணிக்கையில் உள்ளன


லக்ஷ்மணன்

விபீஷணன்

விஸ்வாமித்திரர்

ராமர், சீதை, லக்ஷ்மணன், வணங்கும் முனிவர்

வாழ்த்தும் சப்த ரிஷிகள்



சுகாசனத்தில் திருமால்

லக்ஷ்மி நாராயணனாக

சுதர்சனம் (சக்கரம்), பாஞ்சஜன்யம் (சங்கு), கௌமோதகி (கதை)
ஆகிய ஆயுதங்களுடன் திருமால்


மேலே சாரங்கம் (வில்), அம்பறாத் தூணி பக்கத்தில் இருக்க ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் திருமால்
கீழே திருமகள், நிலமகளுடன் திருமால்

திருமகள், நிலமகளுடன் திருமால்

கஜேந்திரனின் அபயக் குரல் கேட்டு கருடன் மீது விரைந்து வந்து
முதலையைக் கொல்ல ஆழியைச் செலுத்தும் நிலையில் திருமால்

கஜேந்திர மோட்சம்

திருமாலின் மோகினி அவதாரம்
அனுமனை விட அதிகமாக அழகிய பெண்களின் சிலைகள் உள்ளன.
அக்கம்பக்கத்தில் முனிவர்கள் கிறங்கிப் போய் இருந்தால் விஷ்ணுவின் தாருகாவன மோகினி

மோகினி

சுதர்சனர்

திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள் சிறிதும் பெரிதுமாக இந்த மண்டபத்தில் நிறைந்துள்ளன. இங்கு முதல் மூன்று அவதாரங்கள் (வலமிருந்து இடதாக) - மச்சம், கூர்மம், வராகம்

வராக அவதாரம்

பூவராகர்

லக்ஷ்மி நரசிம்மர்

நரசிம்மர் இரண்யனுடன் போர்

இரண்யவதம்

வாமனாய் வந்து மூவுலகும் அளந்தோன்

மூவுலகளந்தோனின் சிறு சிற்பம்

கண்ணனும் ராதையும்

அதே சிற்பம் வேறொரு கோணத்தில்

கண்ணனுடன் குலாவும் பெண்.
நீள் சடை, அதன் நுனியில் உள்ள பூவைக் கொத்தும் பறவை




கண்ணன் இவ்வாறு கொண்டையாளை ஏமாற்றி
நீள்சடையாளுடன் குலாவும்
பல சிறு புடைப்புச் சிற்பங்கள் தூண்களில் உள்ளன.



கோபியரின் ஆடை திருடும் கண்ணன்

ஆகமங்களில் கட்டுப்பாடுகளின்றி
சிற்பி தன் கற்பனைக்கேற்ப விதவிதமாய்
சிலை வடிக்க இடம்தரும் கதை

வேணுகோபாலன்

தனிமையில் கண்ணன்
மேலே வாழைப்பூவைக் கொத்தும் இரு கிளிகள்.

தேர் மீது மன்மதன்  
தாமரை, அசோகம், குவளை, மா, முல்லை
ஆகிய தன் ஐந்து மலர் அம்புகளுள் ஒன்றை
கரும்பு வில்லில் பொருத்தி தொடுத்தவாறு

ரதி

நாட்டியப் பெண். பெருமளவில் பெண் சிற்பங்கள் இங்கு உள.

வீணை வாசிக்கும் பெண்
மேலே பூக்களைக் கொத்தும் பறவைகள்

வீணைப் பெண்

மகரத்தின் மீது கங்கை கொடிப்பெண்ணாக

காவற்பெண்டு





சடை அழகும் நீளமும் காண்க

குதிரை வீரன் தூண்கள் மண்டபத்தின் வெளித்தூண்களாக அமைதுள்ளன.

பரங்கி












கும்பகோணம் மகாமகக் குளம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத்தில் 12 சிவன் கோயில்களும், 5 திருமால் கோயில்களும் பங்கெடுக்கும். அவற்றுள் ராமசாமிக் கோயிலும் ஒன்று

ராமசாமி கோயில் தேர்


துணை:

(1) அருள்மிகு இராமசாமிக் கோயில் - ஸ்தல வரலாறு; கோயில் வெளியீடு




ரகுநாத நாயக்கருக்கு ராம சரிதத்தைக் கேட்பதிலும் படிப்பதிலும் பேரார்வம்.  தினமும் தன் அவையில் ராமாயணத்தைப் படிக்கச் சொல்வாராம். ராமாயணத்தைப் படிக்கும் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வாராம். அதனால் அவருக்கு 'அனுவிரத ராமகதாம்ருத சேவகன்' என்னும் பட்டம் ஏற்பட்டது. ரகுநாதன் என்பது ராமனின் ஒரு பெயர்.

கோயிலைக் கட்டியவர் அச்சுதப்ப நாயக்கரா, ரகுநாத நாயக்கரா அல்லது முன்னவர் காலத்தில் தொடங்கி பின்னவர் காலத்தில் முடிந்ததா என்பதில் பல கருத்துகள் உள்ளன. "இவைகள் எல்லாம் பக்கத்தில் உள்ள தாராசுரப் பகுதியில் புதைந்து கிடந்தன என்றும், ராமனே தஞ்சை மன்னர் அச்சுத நாயக்கன் கனவில் தோன்றித் தான் இருக்கும் இடத்தை அறிவித்தான் என்றும் அதன் பின்னரே அச்சுத நாயக்கன் அந்த விக்கிரகங்களை எடுத்துக் கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தான் என்றும் அறிகிறோம்." என்கிறார் பாஸ்கரத் தொண்டைமான் 1961 இல் வெளியிடப்பட்ட 'வேங்கடம் முதல் குமரி வரை 3' என்ற தனது நூலில். அவர் ராமாயண ஓவியங்களைப் பற்றி "இவைகள் எல்லாம் சமீபகாலத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்." என்று கருத்து தெரிவிக்கிறார்.

2021 இல் சிற்ப மண்டபத்தின் கிழக்குப் பாகத்தில் ஒரு பகுதியில் கருங்கல் மேற்கூரை விரிசலிடத் தொடங்கியதால் தற்காலிகமாக முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்