குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு, சென்னை

 


சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ளது குறுங்காலீஸ்வரர் கோயில். 
இக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனது (1178 - 1219) மற்றும் விஜயநகர கால கல்வெட்டுகள் இவ்வூரை 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மாங்காடு நாட்டுக் கோயம்பேடு' என்று அழைக்கின்றன.# 
15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூரை 'கோசைநகர்' என்கிறார்
 

ஆறு நிலை ராஜகோபுரம்.
கோபுரம், மூலவர் கருவறை, அம்மன் கருவறை மூன்றுமே வடக்கு நோக்கியவை. வடக்கு தவத்துகுரியது. (தெற்கு - எம பயம் நீக்குவது, கிழக்கு - நன்மை பயப்பது, மேற்கு - செல்வம் தருவது) 

மேற்கண்ட கோபுரம் புதிதாகக் கட்டப்பட்டது. அதற்கு முன் இருந்த கல் தளமும், சிறிய கோபுரமும்.
(படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858)

கோயிலின் முன் வடகிழக்கில் குசலவ தீர்த்தம்.
பித்ரு தோஷம் தீர இங்கு பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்யலாம். நீண்ட நாள் பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி தெரியாதவர்கள் எந்நாளிலும் இங்கு தர்ப்பணம் செய்யலாம்.*
(படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858)

தல புராணம்: 
ராமனால் நாடு கடத்தப்பட்ட சீதையும், அவள் பெற்ற இரட்டையர் லவனும், குசனும் இங்கிருந்த வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி இருந்தனர். ராமனின் (கோ - அரசன்) அசுவமேத யாகக் குதிரையை (அயம்-குதிரை) பிடித்து வைத்தனர்.  அதனால் 'கோயம்பேடு' (கோ+அயம்+பேடு; பேடு-சிற்றூர்) என்று இவ்விடம் பெயர் பெற்றது$. குதிரையை மீட்க நடந்த போரில் தந்தை என்று அறியாது ராமனுடன் போரிட்டனர். அதனால் உண்டான பித்ரு தோஷம் நீங்க லவனும் குசனும் குறுங்காலீஸ்வரரை வணங்கினர். 
வேள்விக் குதிரையை ராமன் தேடி வந்தபோது இங்குள்ள ஆற்றின் கரையில் அமர்ந்ததால், அந்த பகுதிக்கு ‘அமர்ந்த கரை’ என்று பெயர் வந்தது. அதுவே இப்போது, ‘அமிஞ்சிகரை’ ஆனது.

2001 இல் வெளியிடப்பட்ட தல வரலாற்று நூல்.
இக்கோயில், பக்கத்தில் உள்ள வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் இரண்டையும் பற்றிய நூல். இக்கோயிலில் உள்ள 14 கல்வெட்டுகளைப் பற்றிய முழுமையான தகவல்களையும் தருவது சிறப்பு. இதைத் தமிழ் இணையக் கல்விக் கழக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்:
கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர், 
வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு.pdf 



ரிஷபம்
சிறப்பு: மூக்கணாங்கயிறுடன் உள்ளது.

குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) - வடக்கு பார்த்தவர்
மிகச் சிறிய பாணம் ஆதலால் இப்பெயர். (குசலவம் - நசுங்கியது)
மணலில் புதைந்திருந்த லிங்கம் சோழ மன்னன் ஒருவனின் தேர் சக்கரத்தில் பட்டு நசுங்கி இவ்வாறானது என்று ஒரு கதை.
(படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858)
இக்கோயிலின்  இறைவன் “குறுங்கால் ஆண்டார்” என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்.  இப்பொழுதும் இறைவனின் பெயரும், ஊர்ப்பெயரும் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சாமரமும் வெண்கொற்றக் குடையும் கொண்டு வெண்சாமர விநாயகர்.
அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் வழக்கமான இடத்தில்.

கருவறை வடக்கு நோக்கி உள்ளதால் கருவறை தேவ கோட்டத் தெய்வங்களும் தத்தம் திசை நோக்கி இடம் மாறியுள்ளன.
கிழக்கு பார்த்த கருவறையில் இடது பக்கம் வடக்கு பார்த்து துர்க்கைக்கு பக்கத்தில் இருக்கும் நான்முகன் இங்கு கருவறையின் வலது புறம் கிழக்கு பார்த்து விநாயகருக்கு பக்கத்தில் இருக்கிறார்.

கிழக்கு பார்த்த கருவறையில் இடது பக்கம் தெற்கு பார்த்து விநாயகருக்கு பக்கத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, இங்கு கருவறையின் பின்புறம் தெற்கு பார்த்து இருக்கிறார்.
(படம்: தமிழ் இணையக் கல்விக்கழகம்)

வள்ளி - முருகர் - தெய்வானை
இவ்வூரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
திருப்புகழில் இவ்வூரை 'கோசைநகர்' என்கிறார்.
(படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858)

திருவொற்றியூர், திருமயிலை, திருவான்மியூர், கோயம்பேடு, திருவேற்காடு, திருலலிதாயம், திருமுல்லைவாயல் ஆகியவை அருணகிரிநாதரால் பாடப் பெற்றவை. இவற்றுள் கோயம்பேடு தவிர்த்த மற்ற தலங்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். எனவே, கோயம்பேடும் தேவாரப் பாடல் பெற்றிருக்க வாய்ப்புண்டு. 

அறம் வளர்த்த நாயகி (தர்மஸம்வர்த்தினி)
இறைவி சந்நிதி இறைவனின் வலப்புரம் இருப்பதும், அம்மையின் இடது திருவடி முன்னோக்கி இருப்பதும் சிறப்பு. 

"கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை"
"வடக்கு பார்த்த சிவனும் இல்லை
மடக்கு போன்ற லிங்கமும் இல்லை"
என்பன வேறு எங்கும் இல்லாத சிறப்புகளைக் குறிக்கும்பழமொழிகள்.

வித்தியாசமான 'நூதன பஞ்சவர்ண நவகிரக' அமைப்பு. 
நவகிரகங்களில் சூரியன் தேவியர் சாயா, உஷையுடன் ஏழு குதிரைகள் இழுக்கும் ஒற்றைச் சக்கரத் தேரில் அமர்ந்துள்ளார். சாரதியாக அங்காரகன்!
கிரகங்கள் - பச்சை, ரதம் - கறுப்பு, தாமரை - சிவப்பு, கீழ் பீடம் வெள்ளை, பூமி - மஞ்சள் என ஐந்து நிற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புது வகை நவகிரக அமைப்பை திருவலம் மௌன குருசாமி 1965 இல் பிரதிஷ்டை செய்தார்.

கல்வெட்டுகள்

பல்லவர்கள், குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர் ஆகியோர் ஆட்சி காலங்களில் இந்த கோவிலுக்கு மானியம் வழங்கப்பட்டு கோவில் திருப்பணி நடந்துள்ளது. அதற்கு சாட்சியாக  1 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.

மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 14 இக்கோயிலில் உள்ளன. “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய” என்ற அவனது விருதுப்பெயருடன். எனவே, கோயில் குறைந்தது 800 ஆண்டுகள் பழமையானது எனலாம்.

ஒரு கல்வெட்டு, இதே ஊரைச் சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்று நடத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளனர். அவ்வாறு பொறுப்பேற்ற சிவப் பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள் மூலம் இங்கு ஒரு ஊர்சபை இருந்ததும் தெரிகிறது 

கோயில் முன்னுள்ள 16 கால் மண்டபம் ஒவ்வொரு தூணின் அடிச் சதுரத்தில் பக்கத்திற்கு ஒன்றாக 4 சிற்பங்கள். ஆக 64 வெவ்வேறு சிற்பங்கள். அனைத்திற்கும் பெயர்ப்பலகை உள்ளது சிறப்பு. ஒரு சிற்பக் கலைக்கூடம் போல. சிற்பம் பயில நல்வாய்ப்பு.




பைரவர்

வஜ்ராயுதம். சக்தி ஆயுதங்களோடு முருகர். திருநின்றீசர்??


















மேலிரு படங்களுடன் ஒப்பிட்டு வேணுகோபாலன்
படிமத்திற்கு ஸ்வஸ்திகாசனம் தரும்
சமநிலையை, அழகைக் காண்க.

































சரபேஸ்வரர்
தற்போது ஏற்றம் பெற்று வரும் இறை.

திருமால்




துணை










Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்