குடந்தை கீழ்கோட்டம் - நாகேசுவரர் கோயில்
அமைவிடம்
கும்பகோணம் நகரில் கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது.
ஊர்ப் பெயர்
இவ்வூரின் பண்டைய பெயர் 'திருக்குடமூக்கு'. கல்வெட்டுகளில் முதலாம் ராஜேந்திரன் காலம் முதல் 'உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கு' என்றும், அதற்கு முன் 'வடகரை பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கு' என்றும் குறிப்பிடப்படுகிறது.
கோயில் வரலாறு
தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 90-வது தலம். காவிரித்தலம். திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
பல்லவர் கால செங்கள் தளி முற்கால சோழர்களான முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஆ 871 - 907), முதலாம் பராந்தக சோழன் (பொ.ஆ 907 - 955) காலத்தில் கற்றளியாக்கப்பட்டது.
'பாடகச்சேரி இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான் புதர் மண்டிக்கிடந்த இந்தக் கோயிலை புதுப்பித்து 1923-ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்வித்துள்ளார், அதற்காக தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுத்து நிதி திரட்டியுள்ளார். பின்னர் 1959, 1988, 2015 இல் குடமுழுக்குகள் நடைபெற்றன.
இப்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
தலவரலாறு
பூவுலகைத் தாங்கும் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் வருந்தினான். சிவனிடம் உலகைத் தாங்கும் சக்தியை வேண்டினான். ஆயிரம் தலைகளில் தாங்கும் பாரம் ஓரே தலையில் தாங்கும் சக்தி பெறும் வழியை சிவன் கூறி அருளினார். அவ்வாறே ஆதிசேஷனும் பிரளயத்திற்குப் பிறகு குடந்தையில் அமுதக்குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடத்தில் இலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்து சக்தியைப் பெற்றான். வில்வம் விழுந்ததால் இவ்விடம் வில்வவனம் எனப்பட்டது.
இறைவன் பெயர்
- 'குடந்தைக் கீழ்கோட்டம் உடையார், உடைய நாயனார், பர௳ஸ்வாமி, பெருமானடிகள், மஹாதேவர், மூலபர்' - கல்வெட்டுப் பெயர்.
- 'நாகேஸ்வரர்' - தற்காலப் பெயர் - ஆதிசேஷன் வழிபட்டதால்.
- வில்வவனநாதர், வில்வனேசர் - அமுதக்குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடம்
- குடந்தைக் கீழ் கோட்டத்து கூத்தனார்
- பாஸ்கரேஸ்வரர் - சூரியன் வழிபட்டதால் (பாஸ்கரன் - சூரியன்
அம்மன் 'பெரியநாயகி'.
தலமரம் வில்வம்.
தீர்த்தம் - சூர்ய புஷ்கரணி, சிங்கமுக தீர்த்தம், நாகதீர்த்தம்.
கோயிலின் அமைப்பு
மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்ட கோயில்.
![]() |
| ஐந்து நிலை ராஜகோபுரம் |
கல்வெட்டுகள்
விமானம் உள்ளிட்ட மையக்கோயிலின் குமுதம், சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.
குடந்தைக் கீழ்கோட்டம் நாகேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கைகள், தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள குடந்தை கல்வெட்டுகள் என்னும் நூலிலும் வெளியாகியுள்ளன. குடந்தைக் கல்வெட்டுகள் நூலில் 55 கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. (குடந்தைக் கல்வெட்டுகள்)
இக்கோயில் கல்வெட்டுகள் கீழ்கண்ட மன்னர்களின் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை.(பொ.ஆ 907 - 955)
- முதலாம் ஆதித்த கரிகாலன் (பொ.ஆ 871 - 907)
- முதலாம் பராந்தகன் (பொ.ஆ 907 - 955)
- சுந்தரசோழன் (பொ.ஆ 963 - 980)
- முதலாம் இராஜேந்திரன் (பொ.ஆ 1012 - 1044)
- இராஜாதிராஜன் (பொ.ஆ 1018 - 1054)
- மூன்றாம் குலோத்துங்கன் (பொ.ஆ 1178 - 1218)
- மூன்றாம் இராஜராஜன் (பொ.ஆ 1216- 1256)
- பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக நெடுஞ்சடையன் பொ.ஆ. 768 - 815)
- கோனேரிதேவ மகாராயர் (விஜயநகர அரசப் பிரதிநிதிபொ. ஆ. 1490)
- கிருஷ்ணதேவராயர் (பொ. ஆ. 1509 - 1529)
இக்கல்வெட்டுகள் இக்கோயிலின் இறைவர் திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு விளக்கெரிக்க அளிக்கப்பட்ட சாவாமூவாப் பேராடுகள் கொடை, இறைவனுக்கும் அடியார்களுக்கும் திருவமுது அளிக்க, வழிபாடு செய்ய நிலம் மற்றும் பொன் கொடை, காசு கொடை, கோயில் வளாகத்தில் புதிதாக இறைவர்களை நிறுவுதல், பணியாளர்களுக்குக் கொடை ஆகியவை குறித்தவை. சூரியனுக்கும், மாதொருபாகன் போன்ற மற்ற தெய்வங்களுக்கும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை அரசு அதிகாரிகள், அரச மகளிர் ஆகியோர் அளித்தவை.
சித்திரை மாதத்தில் 11, 12, 13 ஆகிய நாட்களில் சூரியனின் ஒளி கருவறையின்மீது நன்கு விழுகிறது. நாகேஸ்வரர் உயரமான ஆவுடையாருடன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால் பாணம் சிறியதாக அமைந்துள்ளது.
மையக்கோயில்
இருதள நாகர விமானம். சுக நாசி கொண்டது. பிரதிபந்த அதிட்டானம்.
விமானத்தின் முன் கருவறைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியான இடைநாழிகை எனப்படும் அந்தராளம். அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம்.
விமானத்தின் ஹாரத்தில் எழிலார்ந்த கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. வடக்கில் நான்முகன், தெற்கில் வீணைமீட்டும் தென்முகன், மேற்கில் திருமால் அமர்ந்த நிலை . மேலும் ஆடல்மகள், மத்தளம் வாசிக்கும் பெண், துறவியர், புத்தர் போன்ற சிற்பங்களும் அமைந்துள்ளன.
இரண்டாவது தளத்தில் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
![]() |
| பாதபந்த அதிஷ்டானம்; அதிஷ்டான, வேதி கண்டபாத சிற்பங்கள் |
![]() |
| இருதள நாகர விமானம். சுக நாசி கொண்டது. |
![]() |
| தரைதளமும், ஹாரமும் கல் கட்டுமானம். முதல் தளம், கிரீவம், சிகரம் சுதைக் கட்டுமானம் |
தேவகோட்டச் சிற்பங்கள்
தேவகோட்டங்களில் தெற்கில் தென்முகக்கடவுள், மேற்கில் மாதொரு பாகன், வடக்கில் நான்முகன், மற்றும் அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர்.
![]() |
| அர்த்தநாரீஸ்வரர் |
![]() |
| நான்முகன் |
மற்ற கோட்டச் சிற்பங்கள்
மற்ற கோட்டங்களில் உள்ள அழகிய இயல்பான சிற்பங்கள் யாருடையவை எனபதைப் பற்றி ஊகங்களே உள்ளன.
கண்டபாத ராமாயணக் குறுஞ்சிற்பங்கள்
அதிட்டான மற்றும் வேதியின் கண்ட பாதங்களில் ராமாயணப் குறுஞ் சிற்பங்கள் அமைந்துள்ளன.
![]() |
| ராவணன் சீதையை கடத்திச் செல்லுதல் |
![]() |
| சூர்ப்பனகை மூக்கறுபடுதல் |
![]() |
| வாலி சுக்ரீவன்சண்டை, ராமர் வாலி மீது அம்பு எய்ய ஆயத்தம் |
![]() |
| வாலி வதம் - ராம பாணத்தால் துளைக்கப்பட்டு மரணப்படுக்கையில் வாலி |
விமானத்தின் மேற்பாகம்
![]() |
| மேற்கு - விஷ்ணு |
![]() |
| புத்தர் |
![]() |
| புத்தர், பாரந்தந்தாங்கி யாளிகள் |
![]() |
| புத்தர், பாரந்தந்தாங்கி யாளிகள் |
![]() |
| நாட்டியப் பெண் |
![]() |
| தெற்கு - வீணாதர தக்ஷிணாமூர்த்தி |
![]() |
| வடக்கு - பிரம்மா, கர்ண கூடங்களில் புத்தர்கள், பாரந்தாங்கும் யாளிகள் |
திருச்சுற்றில் சோழர் கால சூரியன் கோயில் உள்ளது
![]() |
| சூரியன் கோயில் |
![]() |
| சூரியன் கோயில் |
![]() |
| சூரியன் கோயில் |
உட்பிரகாரத்தில் முருகன் சந்நிதி உள்ளது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். காளி, வீரபத்திரர் சன்னிதிகள் எதிரேதிரே உள்ளன.
![]() |
| கங்கை கொண்ட வினாயகர் |
நடராச மண்டபம்
இங்குள்ள நடராச மண்டபம், 'பேரம்பலம்', 'ஆனந்தத் தாண்டவ நடராசசபை' எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல்லாலான தேர் சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற்றுள்ளன. இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன.
நடராஜ மண்டபத்திற்கு எதிர்புறம் ஊர்த்துவ தாண்டவருக்குத் தனிச் சன்னிதி உள்ளது. இங்கு சிறிய கருவறையில் ஊர்த்துவ தாண்டவ நடராசர் ஓவியம் உள்ளது.
![]() |
| படைவெட்டி மாரியம்மன் |
திருவிழாக்கள்
பிரதோஷ வழிபாடு, புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிப் பெருவிழா, சித்திரை மாதம் சூரியப் பூஜை
மகாமகம் தீர்த்தவாரி - கும்பகோணம் மகாமகத்தில் பங்கேற்கும் 12 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று.
கூடுதல் விவரங்களுக்குப் படிக்க



















































Comments
Post a Comment