சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

இடம்

சென்னை போரூர் சந்திப்பின் அருகில் குன்றத்தூர் சாலையின் பக்கத்துத் தெருவில் பாலசுப்பிரமணியர் கோயிலை அடுத்து உள்ளது. அழகிய தூங்கானை மாடக்கோயில்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய ஆலயம். 

கல்லாலான தரைத்தளம் மட்டுமே கொண்ட தூங்கானை மாட விமானத்தின் பழைய வடிவம் 


புதிதாக எழுப்பப்பட்ட மேல் பகுதியுடன் புனரமைக்கப்பட்ட விமானம்

புதிதாக எழுப்பப்பட்ட மேல் பகுதியுடன் மூன்று நிலை தூங்கானை மாட விமானம்.

விமானம் தெற்கில் இருந்து. ஒன்பான் கோள் குரு தலமாக வழிபடப் படுவதால் தென்முகத்தோனுக்குத் தனிக் கூரை, படிகள்.

முதல் நிலை ஆரத்தில் தெற்கில் இராமர், இலக்குவன், சீதை சிவலிங்க வழிபாடு. அனுமன் மந்தார மலையுடன். ஒன்பது சக்திகள்.

மேற்கில் இருந்து விமானம்.


விமானம் வடக்கில் இருந்து

நீராட்டு நீர்வழி


பல்லவர் கால சண்டிகேஸ்வரர்

நடராஜர் சபை - புதிதாய் கட்டப்பட்டது.
புதிதாய் கட்டப்பட்டுள்ள நடராஜர் சபை, பள்ளியறை, அம்மன் சன்னிதி, ராஜகோபுரம் முதலியவற்றின் அதிட்டானங்கள் விமான அதிட்டானத்தின் அதே அமைப்பைக் கொண்டுள்ளன.

சிவகாமசுந்தரி அம்மன் சன்னிதி, கொடிமரம், 5 நிலை ராஜகோபுரம். 

காலம்

சண்டிகேஸ்வரர் சிலை பல்லவர் கால பாணி. இதனால் முதலில் இருந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இராஜகோபுரம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு மூலம் இத்தலம் ராஜேந்திரசோழன் காலத்தில் திருப்பெருங்கோயில் என அழைக்கப்பட்டதும், சோழமன்னர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதும் தெரிகிறது. கட்டிடக் கலை பாணி (மாங்கனி போதிகைகள் முதலியன) விஜயநகர காலத்தைச் சுட்டுகின்றன. எனவே, பல்லவர் காலத்தில் எழுப்பபட்ட கோயில் விஜயநகர காலத்தில் கற்றளியாக மாற்றப் பட்டிருக்கலாம்

சிவலிங்கம்

மூலவர் ராமநாதேஸ்வரர்6 அடி உயர சிவலிங்கமாக  காட்சியளிக்கிறார். லிங்கத்திற்கு அருகில் ஒரு பெரிய திரிசூலம் நிறுவப்பட்டுள்ளது.  அன்னை சிவகாமி சுந்தரி தெற்கு நோக்கி ஒரு தனி சன்னதியில் இருக்கிறார். வெளிப் பிரகாரத்தில் பிள்ளையார், முருகர் சன்னதிகள் உள்ளன. 

விமானத்தின் தெற்குக் கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பகவானாக வணங்கப்படுகிறார். அவ்வாறு இந்தக் கோயில் சென்னையின் குரு பரிவாரத் தலமாகிவிட்டது. 

தொன்மம்

ராமர் சீதையைத் தேடி அலைந்தபோது இலுப்பை மரங்கள் நிறைந்த இந்த போரூர் காட்டை அடைந்தார். அவர் காலில் ஒரு நெல்லி மரத்தின் வேர் இடறியது. உள்ளுணர்வால் அவ்விடத்தில் சிவலிங்கம் உள்ளது அறிந்தார். அதை மிதித்த குற்றத்தைப் போக்க அந்த இடத்திலேயே அமர்ந்து ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனியை மட்டும் உண்டு 48 நாட்கள் அவர் தவம் புரிந்தார் . சிவன் அவருடைய தவத்தை மெச்சி 6 அடி அமிர்தலிங்கமாக வெளிப்பட்டார். ராமருக்கு சீதை இருக்கும் வழியைக் காட்டினார். அதனால் இறைவன் ராமநாதீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ராமேஸ்வரத்துக்கு முன்னதாகவே ராமர் வழிபட்ட தலம் என்பதால் 'உத்தர ராமேஸ்வரம்' என்று பெயர். ராமர் வழிபட்டதன் நினைவாக இங்கு தீர்த்தம் வழங்கி ,சடாரியும் சாத்துகிறார்கள்.

பள்ளியறை முன்சுவர் சிற்பம்

ராஜகோபுர சிற்பங்கள்




மாதொருபாகன்













 கோயில் கதவு மரச் சிற்பங்கள்



தலபுராணம்
















Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்