வேளச்சேரி தண்டீஸ்வரம்
கல்வெட்டுப் பெயர்
ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்புலியூர்க் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு வெளிச்சேரி - சுந்தர சோழர், முதலாம் ராஜராஜர், முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டுகள்.
வெளச்சேரி எனும் ஜீனசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலம் - இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன்.
![]() |
| 5 நிலை தெற்கு கோபுரம் பக்கச் சுவர்களோடு ஒப்பிடுகையில் பெருவாயில் அகன்று உள்ளது. மேல் உள்ள நான்கு ஆரங்களின் சாலைகளும் முன்தள்ளியும், அகன்றும், அடுத்த நிலை வரை உயர்ந்தும் பெரிதாக உள்ளன. |
![]() |
| கோயிலின் மாதிரி வடிவம் தெற்கைத் தவிர கிழக்கிலும் மேற்கிலும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. வடக்கில் கோபுரம் இல்லை. |
![]() |
| நடராஜர் சன்னிதி பின்னால் உள்ள சுவரில் உடைந்த சண்டிகேஸ்வரர். சிற்ப அமைதியைக் கொண்டு இது பல்லவர் காலத்ததாக கருதப்படுகிறது. இந்த கோயில் முதலில் தந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஒரு ஊகம். |
![]() |
| பிள்ளையார் |
![]() |
| தென்முகத்தோன். உத்குடி அமர்வு. காலடியில் இரு முனிவர்கள். நன்றி: temple.dinamalar.com/ |
![]() |
| நான்முகன் |
![]() |
| கொற்றவை |
![]() |
| பூதவரியும் மகரதோரணமும் |
![]() |
| அதிட்டானத்திலும் சுவரிலும் உள்ள கல்வெட்டுகள் |
![]() |
| கருணாம்பிகை சன்னிதி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் அம்மனுக்கு ஒரு திருச்சக்கரம் செய்து பதித்தார். அவரது மனைவி வேளச்சேரியில் பிறந்தவர். |
![]() |
| வீரபத்திரர் நன்றி: temple.dinamalar.com/ |
![]() |
| வாயிற்காவலர் |
தண்டீஸ்வரர் தொன்மம்
திருக்கடையூரில் மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்கச் செய்த முயற்சியில் சிவனின் சினத்திற்கு ஆளாகி தண்டத்தை இழந்த எமன் இங்கு சிவனை வழிபட்டு தண்டத்தை மீண்டும் பெற்றார்.
வேதஸ்ரேணி தொன்மம்
கல்ப முடிவில் மூவுலகும் நீரில் மறைந்துவிட அதன் மீது யோகத் துயிலில் ஆழ்ந்திருந்தார் திருமால். அவர் தொப்புள் கொடித் தாமரை மீது அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார் நான்முகன். அவர் வாயிலிருந்து வெளிவந்து விழுந்தன வேதங்கள். சோமகாசுரன் அவற்றைக் கவர்ந்து சென்று நீருக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான். தேவர்கள் திருமாலிடம் முறையிட அவர் மீன் உரு எடுத்து வேதங்களை மீட்டார். வேத நாராயணப் பெருமாள் ஆக நாகலாபுரத்தில் கோயில் கொண்டார். அசுரனால் மாசடைந்த வேதங்கள் வேளச்சேரியில் தண்டீஸ்வரரை வழிபட்டு தூய்மை அடைந்தன. இந்தத் தலம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது. பின்னர் வேளச்சேரி ஆக மருவியது. வேள்விச்சேரியே வேளச்சேரியாக மருவியது என்பாருமுண்டு.
மேலும் செய்திகளுக்கு: https://veludharan.blogspot.com/2012/12/dhandeeswaram-velachery-chennai-shiva.html
The niches of the karnakutas of the first tala contains images of a kneeling man on the left and a kneeling lady in the right. Such a feature is otherwise found in Neyyadiappar Temple, Tillaistanam and Vadathirthesvarar Temple, Andanallur in Tiruchendurai
Damilica (Report). Vol. II. The State Department of Archaeology, Government of Tamil Nadu.
மேலும் செய்திகளுக்கு: https://veludharan.blogspot.com/2012/12/dhandeeswaram-velachery-chennai-shiva.html















Comments
Post a Comment