ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்னும் சிற்றூரில் உள்ள பூவராகர் கோயிலில் அமைந்துள்ள 'புருஷசூக்த மண்டபம்' மிக அழகான மற்றும் தனித்துவமான் 16 கால் மண்டபம். தரையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நுணுக்கமான சிற்பங்கள், அலங்காரங்கள், அமைப்புகள் உடையது.
![]() |
| நான்கு பக்கங்களிலும் நடுப்பகுதி நுழைவாயிலாக அமைந்துள்ளது. நான்கு நுழைவாயில்களின் இரு பக்கங்களிலும் யாழித் தூண்கள் உள்ளன. |
விதானச் சிற்பங்கள்
நடு நான்கு தூண்கள்
இந்தத் தூண்களில் இந்த மண்டபத்தைக் கட்டியவரான தஞ்சை நாயக்க அரசர் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1614 CE) மற்றும் அவர் குடும்பத்தினர் சிலைகள் உள்ளன.
தென்மேற்குத் தூண்
![]() |
| தாருகாவனத்தில் மோகினியும் முனிவர்களும் - 1 |
![]() |
| தாருகாவனத்தில் மோகினியும் முனிவர்களும் - 2 |
![]() |
| ஆடை கவர்ந்த கண்ணன் |
அமைவிடம்
கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து ஜெயம்கொண்டம் செல்லும் சாலையில் இருந்து சுமார் 7 கிமீ கிழக்கில் உள்ள சிற்றூர். விருத்தாசலத்தில் இருந்து 20 கிமீ, சிதம்பரத்தில் இருந்து 36 கிமீ தூரம்.
தலச் சிறப்பு
திருமாலின் ஐந்து நிலைகளுள் உயிர்களுக்கு அருள்புரிய காட்சி தரும் திருமேனி நிலை 'அர்ச்சை' வடிவம். நான்கு விதங்களில் நிறுவப்படும் அர்ச்சை வடிவத்தில் திருமால் தானாகவே தோன்றிய திருமேனிகள் 'ஸ்வயம் வியக்தம்' (தான் தோன்றி) எனப்படுகின்றன. அத்தகைய தான் தோன்றி திருத்தலங்கள் எட்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீமுஷ்ணம்.
பெயர்
இந்த மண்டபம் புருஷசூக்தம் ஓதுவதற்குப் பயன்பட்டதால் இந்தப் பெயர்.
இங்குள்ள சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளில் 'திருமுட்டம், தெற்றம்பட்டு, முடிகொண்ட சோழ நல்லூர்' என்ற பெயர்கள் வழங்குகின்றன. அந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீ வராஹ ஆழ்வார் தானங்கள் பெற்றுள்ளார். ஆனால், வராகர் கோயிலில் சோழர் கல்வெட்டுகள் இல்லை. விஜயநகர காலம் முதல்தான் கல்வெட்டுகள் உள்ளன. ஸ்ரீமுஷ்ணம் என்ற பெயர் விஜயநகர காலத்தில் வழக்கில் வந்தது.
‘மூஷணம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு திருடுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாவங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது. முட்டம் - முட்டுப் பாதை, காக்கை
தொன்மம்
திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சன் என்ற அசுரன் கடலுக்குள் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்டார். தனது ஒரு விழிப் பார்வையால் ஒரு அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அந்த அரசமரம் இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் தலவிருட்சமாக விளங்குகிறது.
கருவறையில் வராகரின் திருமேனி மேற்கு நோக்கி இருக்க, முகம் தெற்குப் பார்த்து இருக்கிறது. இரு கைகள். அவற்றை இடுப்பில் வைத்த எழிலான தோற்றம். சாளக்கிராம திருமேனி. திருமகளும் நிலமகளும் உடன் உள்ளனர். பன்றிக்கு விருப்பமான கோரைக் கிழங்கினால் செய்யப்பட்ட முஸ்தாபி சூரணம் பெருமாளுக்கு படைக்கப்படுகிறது.
![]() |
| ஸ்ரீமுஷ்ணம் வராகர் (படம் நன்றி: Alayathuligal/Srimushnam) |









































Excellent coverage with nice pictures and detailed text.
ReplyDelete