Posts

விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 1 - கோயில் அமைப்பு

Image
  சிறப்புகள் எழிலும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த  தூண்களும், சிற்பங்களும், மற்ற உறுப்புகளும் உடைய மண்டபங்கள் கொண்ட கோயில். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. (நேரடியாகப் பாடப் பெறாமல் வேற்றூர் அல்லது தனிப் பதிகங்களில் இடம் பெற்று இருப்பது.) 'கண்ணார் நுதலார் கரபுரம்' எனும் அப்பர் பதிகத்தில் உள்ள கரபுரம் இத்தலம். (பள்ளிகொண்டா தான் கரபுரம் எனும் கருத்தும் உள்ளது.) தல புரானங்கள் இத்தலத்தில் சிவசர்மன் என்ற அந்தணச் சிறுவன் இக்கோயில் சிவாச்சாரியார் ஒருவர் மகனாகப் பிறந்தான். ஐந்து வயதில் தந்தையை இழந்த அவனுக்கு கோயில் வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தர மறுத்தனர் தாயாதிகள். தன்னைப் பணிந்த அவன் அன்னையின் கனவில் சிவன் தோன்றி பிரம்ம தீர்த்தத்திற்கு அவனை அழைத்துவரப் பணித்தார். அங்கு வயோதிக ஆசாரியராக வந்து  உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை நல்கினார். அவன் தந்தையின் பணியான சிவ வழிபாட்டை செய்ய முற்பட்டான். நெடிய சிவலிங்கத்தின் உச்சி எட்டாது தவிக்க சிவன் தலை குனிந்து வழிபாட்டை ஏற்றார். இக்காரணத்தால் இத்தலம் உபநயனம், பிரம்மோபதேசம் ஆகியவை செய்வித்தற்கு சிறந்த தலமாக கருதப்படுகிறது. (1)...

தக்கோலம்

Image
  ஊர் அமைவிடம் தக்கோலம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலிருக்கும் ஒரு ஊர். அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.  கொற்றலை, கல்லாறு என்னும் பழம் பெயர்களுடைய் குசத்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆறு பூண்டி ஏரி வழியாக சென்னையின் வடக்கில் கடலில் கலக்கிறது. ஊர்ப் பெயர் தக்கோலம் என்பது தற்காலப் பெயர். திருவூறல் என்பது கல்வெட்டு, தேவாரத்தில் உள்ள பழம் பெயர். இத்தல இறைவனின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் (திருவூறல்) இப்பெயர். வரலாறு - தக்கோலப் போர் இவ்வூர் அங்கு கி.பி. 949 ஆம் ஆண்டு நடந்த ஒரு போரினால் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அந்தப் போரில் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் தலைமையிலான  சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னர தேவனின் தலைமையிலான ராட்டிரகூடர் படையும் மோதின. இப்போரில் சோழர்களுடன் சேரர்களும்,  ராட்டிரகூடர்களுடன் கங்கர்களும் துணை நின்றனர். கன்னரதேவனின் மைத்துனன் கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் அம்பினால் ராஜாத...

சென்னை - மாங்காடு வெள்ளீசுவரர் கோயில்

Image
 சென்ற நாள்: 18/03/2022 இடம் சென்னை மாங்காடு. பழமையான ஊர். சங்க கால கருப்பு சிகப்பு மட்கலங்களும், பானை ஓடுகளும், முதுமக்கள் தாழிகளும் இங்கு கிடைத்துள்ளன.  பழம் பெயர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் கால உதயேந்திரம் செப்பேட்டில் இவ்வூரின் பெயர்  'சூதவனம்'  என்றுள்ளது. சூதம் = மாமரம்.  வடமொழியில்  'ஆம்ராண்யம்' , தமிழில் ' மாவை'  என்னும் பெயர்களும் உண்டு.  பல்லவர் கல்வெட்டுகளில்  'மாங்காடு' சோழர் கல்வெட்டுகளில்  'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க சோழ வளநாடு என்னும் புலியூர் கோட்டத்தில் அழகிய சோழநல்லூர்'.  (சுந்தர சோழன் பெயரால இப்பெயர் அமைந்திருக்கலாம்). காலம் மூன்றாம் நந்திவர்மன் (பொ. ஆ. 844 - 866) காலத்தில் செங்கற்தளியாக எடுப்பிக்கப்பட்டு,  சோழர்களால் (?10 ஆம் நூற்றாண்டு) கற்றளியாக புனரமைக்கப்பட்டது. கல்வெட்டுகளில் இறைவன் பெயர் மூன்றாம் நந்திவர்மன் 17 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு - கருவறையின் தரை அபராஜித வர்மன் (பொ. ஆ. 879-897) கல்வெட்டு ஒன்று. மூன்றாம் ராஜராஜன் (பொ.ஆ. 1146-1173) கல்வெட்டு இரண்டு விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயன்...