விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 2 - சிற்பங்கள்
விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 1 இல் கோயிலின் அமைப்பைப் பற்றியும், மூல, பரிவார தெய்வச் சிலைகளைப் பற்றியும், தலப் புராணங்களையும், கல்வெட்டுச் செய்திகளையும் பார்த்தோம். இப்பகுதியில் இக்கோயிலின் சிறப்பான சிற்பங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்த சிற்பங்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வெளி திருச்சுற்றில் எழுப்பப்பட்ட கல்யாண மண்டபங்கள், துவஜஸ்தம்ப மண்டபம், சக்தி மண்டபம் எனும் விடயாற்றி மண்டபம், துவஜாரோகண மண்டபம் ஆகிய மண்டபங்களில் உள்ளன.
கல்யாண மண்டபத் தூண்கள்
கோயிலின் வெளி திருச்சுற்றில் வடமேற்கு, தென்மேற்கு மூலைகளில் மதிலை ஒட்டி இரு கல்யாண மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றின் திருச்சுற்றை நோக்கிய இரு பக்கங்களின் வெளிவரிசைத் தூண்களின் துணைத் தூண்கள் மிக அழகியன.
முன்பக்கம் உள்ள ஆறு தூண்களில் இரு மூலைத் தூண்கள் மூன்று துணைத்தூண்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு துணைத்தூணும் சிறு கோயிலைப் போன்ற பாதம் அதன் மேல் அமர்ந்த நிலை சிம்மம், மேலே கபோதம், தூணின் தாங்குதளம், சதுரம், நாகபந்தம், 16 பட்டை கட்டு, தாமரைத் தொங்கல் முதல் பலகை வரையான உறுப்புகள், போதிகை என விரிவாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சதுரங்களின் நான்கு முகங்களிலும் நடனப் பெண்கள் அல்லது இலைக்கருக்குகள் உள்ளன.
![]() |
| தென்மேற்குக் கல்யாண மண்டபம் |
நடுவில் உள்ள இரண்டு தூண்களில் பின்னங்கால்கள் மீது எழும்பி நிற்கும் புரவிகளில் செல்லும் போர் வீரர்கள். அடுத்த இரண்டு தூண்களில் பின்னங்கால்கள் மீது எழும்பி நிற்கும் யாளிகளில் செல்லும் போர் வீரர்கள். இரண்டு யாளித்தூண்களில் ஒன்றில் போர்வீரனாக நான்கு கை துர்க்கை, பின்னங்கைகளில் ஆழியும் சங்கும்.
ஒவ்வொரு தூணின் குதிரை, யாழி, போர்வீரன் முதலிய சிற்பங்கள் வியக்கத்தக்க வடிவ ஒற்றுமையுடன் செதுக்கப்பட்டுள்ளன. முகப் பட்டைகள், கடிவாளங்கள், சேணங்கள், அணிகலன்கள், ஆயுதங்கள், ஆடைகள், என அனைத்தும் பேரழகுடன் விரிவாகவும், நுணுக்கமாகவும் உள்ளன.
![]() |
| தென்மேற்குக் கல்யாண மண்டபம் 2 |
யாளிகளின் கீழ் இலைக்கருக்கள், அதில் ஊஞ்சலாடும் பெண்கள், யாளி குதிரைகளைத் தாங்கும் மகரங்கள், அவற்றின் கீழ் யானை, குதிரை, காலாட் படைகளின் சிற்பங்கள்.
![]() |
| குதிரை, காலாட்படை |
![]() |
| யானை, குதிரைப் படை |
வடமேற்குக் கல்யாண மண்டபத்தில் குதிரை வீரர்கள், காலாள் வீரர்களோடு புலி வேட்டையாடுகிறார்கள். இந்த சிற்பம் கோவை அருகில் உள்ள பேரூர் தூண் சிற்பத்தை நினைவுபடுத்துகிறது.
![]() |
| வடமேற்குக் கல்யாண மண்டபத் தூண் |
இரு கல்யாண மண்டபங்களின் வெளிவரிசைத் தூண்களின் முக்கியமான சிறப்பு ஒவ்வொரு தூணும் தனித்தன்மை கொண்டுள்ளது, ஒன்றைப்போல் வேறொன்று இல்லாதது ஆகும். ஒவ்வொரு தூணாக அணுஅணுவாகப் பார்த்து பரவசப்பட வேண்டியுள்ளது.
மண்டபங்கள் இரும்பு வேலி, கதவுகளால் மூடப்பட்டிருப்பதால் உள்ளே சென்றுப் பார்க்க இயலவில்லை. இரும்புவேலி வழியாக கண்ட மேடை:
![]() |
| கல்யாண மண்டப மேடை |
கல்யாண மண்டப மேடையின் வெளிப்புறத் தாங்குதளத்தின் கண்டத்தில் புராணக் கதை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
![]() |
| தென்மேற்கு கல்யாண மண்டபத்தின் தாங்குதளம் |
![]() |
| கல்யாண மண்டபக் கூரையில் தொங்கும் தாமரை |
![]() |
| மாங்கனிப் போதிகைகள், உத்திரங்கள் மேல் புராணச் சிற்பங்கள் |
![]() |
| நாகபந்தங்களுக்கு இடையில் சிறு சிற்பங்கள் |
தெய்வ சிற்பங்கள்
விஜயநகர கால மண்டபங்களின் ஒரே சிற்பம் பல தூண்களில் காணப்படுவது உண்டு. ஆனால் அவற்றுள்ளும் வேறுபாடுகள் உண்டு. விரிஞ்சிபுரத்தில் தூண் சிற்பங்களும் அவ்வாறே உள்ளன.
சக்தி மண்டபம்
வெளித்திருசுற்றில் சிம்ம தீர்த்தம் அருகேயுள்ள நான்கு கால் மண்டபம். சக்தி மண்டபத்தின் 48 தூண் சிற்பங்களின் (4 தூண்கள், ஒவ்வொரு தூணிலும் மேல் நடு கீழ் என மூன்று சதுரங்கள், ஒவ்வொரு சதுரத்தின் நான்கு பக்கங்களிலுமாக 4 சிற்பங்கள்; 4 x 3 x 4 = 48) ஒன்று விநாயகர். மற்ற 47 உம் சக்தியின் வெவ்வேறு வடிவங்களாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
தல புராணச் சிற்பங்கள்
கோயிலின் வடக்கு நுழைவு வாயிலை அடுத்துள்ள திருச்சுற்று மாளிகையின் கீழ்தளத்தில் முதல் தூணின் நான்கு புறங்களிலும் எட்டுத் தல புராணச் சிற்பங்கள் உள்ளன. திருமால், நான்முகன், கௌரி, கழுதை முக கரன் என்னும் அசுரன் ஆகியோர் சிவ வழிபாடு செய்யும் காட்சிகள், சாவித்ரன் என்னும் அந்தணன் கயிலாயம் செல்ல விமானம் பெறுதல், சிறுவன் சிவசர்மன் சிவ வழிபாடு செய்தல், மிளகு வணிகன் தனபாலன் சிவனை வழுத்துணைக்கு வேண்டித் தொழுவது என்பன அவை.

விதானச் சிற்பங்கள்
கொடிமர மண்டப விதானத்தில் சதுர வடிவ சிற்பம் உள்ளது. நடுவில் தாமரை, அதன் இதழ்கள் மேல் பனித்துளிகள், அவற்றைக் கொத்திக் கொண்டிருக்கும் எட்டு கிளிகள், சுற்றி சதுரங்களில் எண்திசைக் காவலர்கள்.
இது போன்ற விதானச் சிற்பங்கள் இரு கல்யாண மண்டபங்களிலும் உள்ளன. அவற்றில் ஒன்றில் வெளிப்பகுதியில் எண்திசைக் காவலர்களும், மற்றொன்றில் சிவ பார்வதி திருமணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர விதானத்தின் மேற்கு திசையில் பிட்சாடனர் சிற்பத் தொகுதி உள்ளது.
ஆமை மேடை
திருக்கல்யாண மண்டபங்கள் இரண்டிலும் மண்டபங்களின் மேற்குப் பக்கம் மேடை மீது ஒரு மண்டபமும், அதனுள் இரண்டாவதாக ஒரு மேடை மண்டபமும் அமைந்துள்ளன. இரண்டாம் மண்டபத்தின் மேல் ஒரு ஆமை மேடை அமைந்துள்ளது. இது ஆமையின் முதுகின் மேல் உள்ளதைப் போல் அமைந்துள்ளது. ஆமையின் முகம் கிழக்கு நோக்கியுள்ளது. நான்கு மூலைகளிலும் கால்கள். மேடையின் பக்கங்களில் எண்திசைகளுக்குரிய காவலர்கள், யானைகள், நாகங்களுடன் சிங்கங்கள் எட்டும், ரிஷிகள் எழுவரும் மேடையைத் தாங்கி நிற்பது போன்று சித்தரிக்கப் பட்டுள்ளனர். 39 சிற்பங்கள். மேடை இரண்டடி உயரம் 10 அடி பக்கங்கள் கொண்ட சதுர வடிவம். இதே போன்ற ஆமை மேடை வேலூர் கோட்டை ஜலகண்டேசுவரர் ஆலய கல்யாண மண்டபத்திலும் உள்ளது.
சிவன்
யானை உரித்த பிரான் (கஜசம்கார மூர்த்தி) வடிவம் சிவனது எட்டு வீரச் செயல்களில் ஒன்றைக் குறிப்பது. தாருகாவன முனிவர்களது செருக்கை அடக்க பிச்சாண்டியாகச் சென்று அவர்கள் மனைவியர் அவர் அழகில் நிலையழிய கோபமுற்ற முனிவர்கள் அவரை அழிக்க அனுப்பிய வேள்வி யானையுள் புகுந்து அதன் தோலுரித்துப் போர்த்திக் கொண்ட கதை.
உரித்து விரிக்கப்பட்ட யானையின் தோலின் கீழேஅதன் தலையும், பக்கங்களில் அதன் 4 கால்களும் மேலே வாலும் அமைவது மரபு. யானையின் தலைமீது வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்திப் பிடித்து நடனமாடும் சிவன். சில கைகள் யானைத் தோலை விரித்துப் பிடிக்க மற்ற கரங்கள் ஆயுதங்கள் தாங்கும். இந்த வடிவத்தின் பெரிய சிற்பம் கோவை அருகில் உள்ள திருப்பேரூரில் உள்ளது.
மத யானை மனதின் அடையாளம். சிவன் அதன் மத்தகத்தின் மேல் நின்றாடுவது காண்க.
விரிஞ்சிபுரத்தில் இந்த மூர்த்தியின் வெவ்வேறு விதமான நான்கு சிற்பங்கள் உள்ளதைக் கண்ணுறலாம். சடை முதல் அணிகள் வரை வெவ்வேறு விதம். முதல் சிற்பத்தில் 8 கைகள், இரண்டாவதில் நான்கு. மூன்றாவதில் வர அபய குறிப்புகள் காட்டும் ஆயுதங்கள் அற்ற இரு கரங்கள் மட்டுமே. நான்காவது சிற்பத்தின் எட்டு கரங்களில் ஒன்று தும்பிக்கையை பற்றியுள்ளது. ஒவ்வொன்றின் உடல் வளைவுகள் வேறு. இரண்டவது சிற்பத்தின் நளினம் வசீகரமானது.

மற்றொரு வீரச்செயல் காலனைக் கடிந்தது. மார்க்கண்டேயரின் இந்தக் கதை இரு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களிலும் இவ்வாறே இரண்டாகக் காணலாம். முதல் சிற்பத்தில் மார்க்கண்டேயர் லிங்கத்தை அணைத்திருக்க, எமன் வீசிய பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்துள்ளது. இரண்டாவது சிற்பத்தில் சினந்தெழுந்த சிவன் காலனைக் காலால் எத்தும் காட்சி.
திருமால்
காளி
துர்க்கை
விநாயகர், நான்முகன்
பைரவர்
பொதுமக்கள் சிற்பங்கள்
புரியாதவை
சில சிற்பங்களின் பின்னால் உள்ள கதைகள் தெரியவில்லை.
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் பற்றிய முதல் பகுதியை படிக்க கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்குக:

Comments
Post a Comment